சிவகார்த்திகேயனின் ‘டான்’ மே 13ல் ரிலீஸ்?

சிவகார்த்திகேயனின் ‘டான்’ மே 13ல் ரிலீஸ்?

சிவகார்த்திகேயன் நடித்துள்ள `டான்' படத்தை மே 13-ம் தேதி வெளியிட லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, ப்ரியங்கா அருள் மோகன், சூரி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘டான்’. லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்த இருக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குநர் சி.பி.சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். இவர், இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து, மார்ச் 25-ம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அதிகாரபூர்வமாக அறிவித்தது படக்குழு. ஆனால் அன்றைய தினத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படமும் வெளியாகும் என்று விளம்பரப்படுத்தியது படக்குழு. ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது. இதனால் அதே தேதியில் ‘டான்’ படத்தை வெளியிட வேண்டாம் என்று படக்குழு முடிவு செய்தது.

இதைத்தொடர்ந்து ‘டான்’ படத்தை எப்போது வெளியிடுவது என்பது குறித்து ஆலோசித்த லைகா நிறுவனம், மே 13-ம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளது. மேலும், ‘டான்’ வெளியீட்டுக்காக உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்துடன் கைகோத்துள்ளது லைகா நிறுவனம். இதனால், பெரியளவில் திரையரங்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in