சிவகார்த்திகேயனின் ’டான்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயனின் ’டான்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிக்கும் ’டான்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘டான்’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் சிபி சக்கரவர்த்தி. இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக, பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். இவர் ’டாக்டர்’ படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்போது, சூர்யாவுடன் ’எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

எஸ்.ஜே.சூர்யா, சூரி, சமுத்திரக்கனி, முனிஷ் காந்த், பாலசரவணன், காளி வெங்கட் உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார்.

கல்லூரி பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, நடிகர் சிவகார்த்திகேயன் லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி மார்ச் 25-ம் தேதி திரையரங்குகளில் ’டான்’ திரைப்படம் வெளியாகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in