டாக்டர், டான், பிரின்ஸ்; அடுத்தடுத்து ஆங்கில டைட்டில் ஏன்?- சிவகார்த்திகேயன் சொல்லும் ஒரே காரணம் இதுதான்!

டாக்டர், டான், பிரின்ஸ்; அடுத்தடுத்து ஆங்கில டைட்டில் ஏன்?- சிவகார்த்திகேயன் சொல்லும் ஒரே காரணம் இதுதான்!

‘டாக்டர்’, ‘டான்’ என அடுத்தடுத்து தன்னுடையப் படங்களுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பது ஏன் என்பது குறித்து சிவகார்த்திகேயன் பதிலளித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படம் அனுதீப் இயக்கத்தில் தமிழ்- தெலுங்கு என இருமொழிகளிலும் இந்த தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாகிறது. இதற்கு முன்பு நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘டாக்டர்’ மற்றும் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் வெளியான ‘டான்’ ஆகிய இரண்டு திரைப்படங்களுமே சிவகார்த்திகேயனுக்கு நல்லதொரு வெற்றிப் படங்களா அமைந்தது.

விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல், வசூல் ரீதியாகவும் 100 கோடியை எட்டிப் பிடித்து கமர்ஷியல் கதாநாயகனாக சிவகார்த்திகேயனுக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.

அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயனின் முதல் தீபாவளி ரிலீஸாக வெளியாகவுள்ள ‘பிரின்ஸ்’ திரைப்படமும் வெற்றி அடைந்துவிட்டால், ஹாட்ரிக் வெற்றியாக அமையும்.

‘பிரின்ஸ்’ படத்திற்காக ஊடகங்களுக்கு சிவகார்த்திகேயன் அளித்தப் பேட்டி ஒன்றில், ‘’டாக்டர்’, ‘டான்’, ‘பிரின்ஸ்’ என அடுத்தடுத்து உங்களுடைய படங்களுக்கு ஆங்கிலத்தில் தலைப்புகள் தேர்ந்தெடுப்பது ஏன்?’ என்பது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு சிவகார்த்திகேயன், ‘எளிதாக சமூகவலைதளங்களில் புரோமோஷன் விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் நோக்கம். வேறு எதுவுமில்லை’ என பதில் கூறியுள்ளார். ‘பிரின்ஸ்’ திரைப்படத்திற்கு அடுத்து ‘மாவீரன்’, அடுத்து கமல் தயாரிப்பில் ஒரு படம் மற்றும் வெங்கட்பிரபுவுடன் இணையும் படம் என பிஸியாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். இது தவிர்த்து, அவருடைய ‘அயலான்’ படமும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் தீவிரமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in