குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய சிவகார்த்திகேயன்... எக்ஸ் தளத்தில் தெறிக்கவிடும் ரசிகர்கள்!

சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன்
சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன்

உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள், பிரபலங்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் புகைப்படத்தை தீபாவளியை முன்னிட்டு வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் SK21 படத்தில் நடித்து வருகிறார். அதில் அவர் ராணுவ வீரராக நடிப்பதாக கூறப்படுகிறது. அந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு பாண்டிசேரில் நடக்கிறது.

மேலும் சிவகார்த்திகேயனின் அயலான் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இசையன்மைப்பாளர் இமான் கொடுத்த பேட்டியால் சிவகார்திகேயன் பெரிய சர்ச்சையில் சிக்கி இருந்தார். அவரது ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. இந்த நிலையில், அவரது மகன் மற்றும் மகள் இருவரும் நன்றாக வளர்ந்துவிட்டார்களே என ரசிகர்கள் கமெண்டில் கூறி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

தீபாவளியன்று இப்படி விளக்கேற்றினால் ஐஸ்வர்ய கடாட்சம் கிட்டும்!

வெடித்து சிதறும் பட்டாசுகள்... 3 மாவட்டங்களில் காற்று மாசு அதிகரிப்பு!

மோடியை அலற வைத்த இளம்பெண்... பிரச்சார பொதுக்கூட்டத்தில் பரபரப்பு!

திருப்பதியில் இன்று தீபாவளி ஆஸ்தானம்... லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

தனுஷ் முதல் சமந்தா வரை... மூன்றாவது நபர் தலையீட்டால் பிரிந்த பிரபலங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in