`டான்' படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்தார் சிவகார்த்திகேயன்!

`டான்' படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்தார் சிவகார்த்திகேயன்!

`டான்' படத்தை சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் நடிகர் சிவகார்த்திகேயன், ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார்.

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ’டான்’. கல்லூரி பின்னணியில் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.

இந்நிலையில், `டான்' படத்தின் அதிகாலை காட்சியைக் காண டான் படக்குழுவும், நடிகர் சிவகார்த்திகேயனும் சென்னை கோயம்பேட்டில் இருக்கிற ரோகினி திரையரங்கிற்கு திடீரென அதிகாலை விசிட் அடித்தனர். அப்போது, சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து முதல் காட்சியை பார்த்து ரசித்தனர். ரசிகர்களின் விசில் சத்தம் திரையரங்கில் அதிர்ந்தது. அப்போது, தனது செல்போனில் ரசிகர்களை படம்பிடித்து கொண்ட சிவகார்த்திகேயன், கையசைத்து வாழ்த்தினார். சிவகார்த்திகேயனை பார்த்த உற்சாக மிகுதியில் ரசிகர்கள் துள்ளிக்குதித்தனர். தியேட்டரே அதிர்ந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in