சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே 20’ படப்பிடிப்பு 90% நிறைவு

சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே 20’ படப்பிடிப்பு 90% நிறைவு

தெலுங்கில் ‘ஜதி ரத்னாலு’ என்ற காமெடி படத்தை இயக்கியவர் கே.வி.அனுதீப். இவர் இயக்கும் தமிழ்ப் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் 20-வது படமான இதில், சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமிழ் இளைஞரை வெளிநாட்டுப் பெண் காதலிப்பதைப் போன்ற கதையைக் கொண்ட இப்படத்தில் உக்ரைனைச் சேர்ந்த மரியா ரியபோஷப்கா ஹீரோயினாக நடிக்கிறார். ஸ்ரீவெங்கடேஷ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. தமன் இசை அமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் நவீன் பொலிஷெட்டி, பிரேம்ஜி அமரன் உட்பட பலர் நடிக்கின்றனர். ரொமான்டிக் காமெடி படம் இது.

இதன் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் காரைக்குடியில் தொடங்கியது. இப்போது இதன் 90 சதவீதப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன், இப்படத்தின் பாடல் ஒன்றுக்காக நடன ஒத்திகையில் பங்கேற்ற சிவகார்த்திகேயன், மரியாவின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவின. இப்போது அந்தப் பாடல் காட்சியின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது. படப்பிடிப்புக்கு இடையே நடிகர் சிவகார்த்திகேயன், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்குச் சென்றார். அந்தப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in