மறக்க முடியாத பிறந்தநாள்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

மறக்க முடியாத பிறந்தநாள்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
நடிகர் சிவகார்த்திகேயன்

தனது பிறந்தநாளை மறக்க முடியாத நாளாக மாற்றிய ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு, நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டான்' படம், மார்ச் 25-ம் தேதி ரிலீசாக உள்ளது. இதைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள 'அயலான்' வெளியாகும் என்று தெரிகிறது. சிவகார்த்திகேயன் இப்போது தமிழ், தெலுங்கில் உருவாகும் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதை அனூப் இயக்குகிறார்.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 17-ம் தேதி தனது தனது 37-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறி அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: “இந்தப் பிறந்தநாளை சிறப்பாக்கிய நண்பர்கள், நலம் விரும்பிகள், மீடியா மற்றும் அனைத்து நடிகர்களின் ரசிகர்களுக்கும் நன்றி. மாநிலம் முழுதும் நலத்திட்ட உதவிகளை செய்த என் ரசிகர்களுக்கும் இந்த நாளை மறக்க முடியாததாக மாற்றியமைக்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்களை மகிழ்விக்கும் சிறந்த படங்களில் தொடர்ந்து நடிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.