`உங்களோடு பேசிய அந்த 60 நிமிடம்'- ரஜினியுடனான சந்திப்பு குறித்து சிவகார்த்திகேயன் உருக்கம்

`உங்களோடு பேசிய அந்த 60 நிமிடம்'- ரஜினியுடனான சந்திப்பு குறித்து சிவகார்த்திகேயன் உருக்கம்

"உங்களோடு பேசிய அந்த 60 நிமிடம், எனக்கு வாழ்நாள் நினைவாக இருக்கும்" என்று நடிகர் ரஜினிகாந்த்துடனான சந்திப்பு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கமாக கூறியுள்ளார்.

இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் `டான்'. இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். சூரி, சமுத்திரக்கனி, சிவாங்கி உள்பட பலர் நடித்துள்ளனர்.

கடந்த மே 13-ம் தேதி `டான்' படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 12 நாட்களில் ரூ.100 கோடி வசூலை `டான்' படம் கடந்துள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், டான் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். தற்போது, ரஜினிகாந்த், நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், "உங்களோடு பேசிய அந்த 60 நிமிடம், எனக்கு வாழ்நாள் நினைவாக இருக்கும். உங்க நேரத்துக்கும், டான் திரைப்படத்துக்கான பாராட்டுக்கும் நன்றி தலைவா" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in