ராணுவ வீரர் கெட்அப்; மும்பையில் கடுமையான பயிற்சி: புதிய படத்திற்கு தயாராகும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் ராணுவ வீரர் கெட்அப்; மும்பையில் கடுமையான பயிற்சி: புதிய படத்திற்கு தயாராகும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் தன்னுடைய புதிய படத்திற்காக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

’பிரின்ஸ்’ படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ படத்தை முடித்துள்ளார். இந்தப்படம் ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. மேலும், நீண்ட நாட்களாக சிஜி பணிக்காக வெளிவராமல் இருந்த இவரது ‘அயலான்’ திரைப்படமும் இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில், சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசன் தயாரிப்பில் சாய்பல்லவி ஜோடியாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் பிஸியாகி இருக்கிறார். தீவிரமான ஆக்‌ஷன் ட்ராமாவாக உருவாக இருக்கும் இந்தக் கதை 1960-ஐ பின்னணியாகக் கொண்டது. இதில் ராணுவ வீரராக நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

இதற்காக சிவகார்த்திகேயன் கடுமையான பயிற்சிகளை மும்பையில் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயிற்சி இன்னும் 20 நாட்கள் இருக்கும் எனவும், விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது. இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்க இருப்பதால், அதற்கான லொகேஷன் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது படக்குழு. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். முதல் முறையாக சிவகார்த்திகேயன் -ஜிவி பிரகாஷ்குமார் கூட்டணி ஒன்று சேர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் படம் தொடங்குவது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழு தரப்பில் இருந்து வரும் என எதிர்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in