மிகப்பெரிய கடன் நெருக்கடியில் சிவகார்த்திகேயன்?

மிகப்பெரிய கடன் நெருக்கடியில் சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயனின் டான் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதைத் தொடர்ந்து அயலான் படமும் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகும் எஸ்கே20 என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம். இன்னும் இருபது நாட்கள் மட்டுமே ஷூட்டிங் இருக்கிறதாம். அதையும் மிக விரைவில் முடித்துவிட திட்டமிட்டுள்ளார்களாம்.

இந்நிலையில் சிங்கப்பாதை படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கயுள்ளார் என்ற அறிவிப்பு முன்பே வெளியாகி இருந்தது. அட்லீயின் உதவியாளர் அசோக் இப்படத்தை டைரக்ட் செய்ய போகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். அதிலும் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களிலும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. மேலும் தந்தையாக நடிக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவியும், மகன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகிறது.

இதைத் தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் பெரியசாமி இயக்கும் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும், அப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்க உள்ள் நிலையில் இந்திய ராணுவத்தில் சில காட்சிகளை இணைக்க திட்டமிட்டு அதற்கான அனுமதியை பெற படக்குழு முயற்சி மேற்கொண்டுள்ளது. பல காரணங்களால் மிகப்பெரிய கடன் நெருக்கடியில் சிவகார்த்திகேயன் இருப்பதாகவும், அதை சமாளிக்கவே ஓய்வில்லாமல் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in