ஹைதராபாத் தியேட்டரில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன்!

ஹைதராபாத் தியேட்டரில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் ’டான்’ படத்தைப் பார்த்து ரசித்தார்.

சிவகார்த்திகேயன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன், சூரி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘டான்’. லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சி.பி.சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த 13-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

இது தெலுங்கில் ’காலேஜ் டான்’ என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. அங்கும் இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஹைதராபாத் சென்ற நடிகர் சிவகார்த்திகேயன், அங்குள்ள மால் தியேட்டர் ஒன்றுக்கு திடீர் விசிட் அடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அங்கு ரசிகர்களுடன் அமர்ந்து சிறிது நேரம் படத்தைப் பார்த்தார். பின்னர் சில ரசிகர்கள், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் ஹைதராபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அவருடன் சமுத்திரக்கனியும் பங்கேற்றார். ரசிகர்களுடன் சிவகார்த்திகேயன் படம் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in