‘டாக்டர்’ வழியில் ‘டான்’ வசூல் - வெற்றியைத் தந்தைக்கு அர்ப்பணித்த சிவகார்த்திகேயன்!

‘டாக்டர்’ வழியில் ‘டான்’ வசூல் - வெற்றியைத் தந்தைக்கு அர்ப்பணித்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘டான்'. இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராக இருந்த சிபி சக்ரவர்த்தி இந்த கதை மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். இந்த மாதம் திரையரங்குகளில் நேரடியாக வெளியானது.

பிடிக்காத பொறியியல் படிப்பைத் தனது தந்தைக்காகப் படிக்கும் கல்லூரி 'டான்' மாணவன் ஒருவன் தனக்கான லட்சியத்தை அடைந்தானா, தனது தந்தையின் அன்பைப் புரிந்துகொண்டானா என்பதுதான் கதை. படத்தின் கலகலப்பான முதல் பாதியும், இரண்டாவது பாதியில் வரும் அப்பா சென்டிமென்டும் கதை ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற காரணமாக அமைந்தன. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுள்ளது. இந்த நிலையில் இந்தப் படம் வெளியான 12 நாட்களிலேயே உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூலை எட்டியிருப்பதாகப் படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

'டான்' படத்திற்கு முன்பு சிவகார்த்திகேயனின் 'டாக்டர்', திரைப்படம் வெளியாகி 100 கோடி ரூபாயை உலகம் முழுவதும் வசூல் செய்தது. இதனை அடுத்து 'டான்' திரைப்படமும் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், 'டான்' திரைப்படத்தை ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடும் வகையிலான வீடியோ தொகுப்பைத் தனது ட்விட்டர் பகிர்ந்து இந்த வெற்றி குறித்தும் நடிகர் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என தமிழ், தெலுங்கில் கூறி இருக்கிறார். 'இந்த படம் பொறுத்தவரைக்கும் எனது தங்கை மற்றும் தம்பிகள் கொடுத்த அன்பிற்கும் ஆதரவிற்கும் என்னுடைய நன்றிகள். இந்த வெற்றி... அப்பா உங்களுக்குத்தான்!' என அதில் நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in