சிவகார்த்திகேயனின் `எஸ்கே 20’ பர்ஸ்ட் லுக் வெளியீடு!

சிவகார்த்திகேயனின் `எஸ்கே 20’ பர்ஸ்ட் லுக் வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடிக்கும் ’எஸ்கே 20’ படத்தின் தலைப்பும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தெலுங்கில் ‘ஜதி ரத்னாலு’ என்ற காமெடி படத்தை இயக்கியவர் கே.வி.அனுதீப். இவர் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் 20-வது படமான இதில், சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமிழ் இளைஞரை வெளிநாட்டுப் பெண் காதலிப்பதைப் போன்ற கதையைக் கொண்ட இதில் உக்ரைனைச் சேர்ந்த மரியா ரியபோஷப்கா ஹீரோயினாக நடிக்கிறார்.

ஸ்ரீவெங்கடேஷ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. தமன் இசை அமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் நவீன் பொலிஷெட்டி, பிரேம்ஜி அமரன் உட்பட பலர் நடிக்கின்றனர். ரொமான்டிக் காமெடி படம் இது.

இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று அதை படக்குழு அறிவித்துள்ளது. படத்துக்கு ’பிரின்ஸ்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரின் உலக உருண்டையை கையில் பிடித்தபடி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in