'சீதா ராமம்' திரைப்படத்திற்கு மற்றுமொரு சர்வதேச விருது!

சீதா ராமம் திரைப்படத்துக்கு சர்வதேச விருது
சீதா ராமம் திரைப்படத்துக்கு சர்வதேச விருது

'மெல்ஃபெர்ன் இந்திய திரைப்பட விழா 2023' விருதை வென்றது 'சீதா ராமம்' திரைப்படம். இதன் மூலம் 'சீதா ராமம்' படத்திற்கு மற்றொரு சர்வதேச விருது கிடைத்துள்ளது.

வைஜெயந்தி மூவிஸ் மற்றும்  ஸ்வப்னா சினிமாஸ் இணைந்து உருவாக்கிய காதல் கதையாக 'சீதா ராமம்' திரைப்படம் உருவானது. இந்த திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் கதையின் நாயகனாகவும், நடிகை மிருணாள் தாக்கூர் கதையின் நாயகியாகவும், நடிகை ரஷ்மிகா மந்தானா முக்கிய வேடத்திலும் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படத்தை ஹனுராகவ புடி இயக்கியிருந்தார். பி. எஸ். வினோத் ஒளிப்பதிவு செய்த இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருந்தார். இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பரவலான வெற்றி மற்றும் வரவேற்பினை பெற்றது.

ஆண்டுதோறும் ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மெல்ஃபெர்ன் நகரில் இந்திய திரைப்பட விழா சிறப்பாக நடைபெறுகிறது. 14வது மெல்ஃபெர்ன் இந்திய திரைப்பட விழாவான இதில் சிறந்த திரைப்படம் எனும் பிரிவில் போட்டியிட்ட 'சீதா ராமம்' படம் அதற்கான விருதை வென்றுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in