`என்னைப் பற்றி ஆபாசமா பேசியிருக்கீங்க, ஆதாரம் இருக்கா?’: பயில்வானுக்கு பிரபல பாடகி எச்சரிக்கை!

`என்னைப் பற்றி ஆபாசமா பேசியிருக்கீங்க,  ஆதாரம் இருக்கா?’: பயில்வானுக்கு பிரபல பாடகி எச்சரிக்கை!

தன்னைப் பற்றி ஆபாசமாக பேசியதாகக் கூறி பாடகி சுசித்ரா, பயில்வான் ரங்கநாதனை எச்சரித்த ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

யூடியூப் சேனலில் நடிகைகள் பற்றி ஆபாசமாகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசி வருகிறார் என்ற குற்றச்சாட்டு பரவலாகி இருக்கிறது. இதற்கு திரைத்துறையில் கடும் எதிர்ப்புக் கிளம்பி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில், பின்னணி பாடகி சுசித்ரா குறித்து தவறாக பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த சுசித்ரா, அவரை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். இந்த ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதில் பாடகி சுசித்ரா, ''என்னை பைத்தியம், போதைக்கு அடிமை, யார் எது கேட்டாலும் பண்ணுவேன்னு சொல்லியிருக்கீங்க. இதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கா? இல்ல, யாராவது சொல்ல சொல்லி சொன்னீங்காளா? என்னைப் பற்றி அசிங்கமா, ஆபாசமா பேசியிருக்கீங்க. ’சுசித்ரா முழுப் பைத்தியம், கார்த்திக்குமார் பாவம், அவர்தான் காப்பாற்றினார். இருந்தாலும் அவங்க முழு பைத்தியமாயிட்டாங்கன்னு சொல்லியிருக்கீங்க. ரொம்ப எல்லை மீறி போயிட்டீங்க. ஒரு பொண்ண இவ்வளவு கேவலமா பேசுறீங்களே, நாக்கில் நரம்பு இல்லாம வாய் கூசாம பேசுறீங்களே. நீதிமன்றத்தில் சொல்லுங்க, உங்க கருத்தை’ என்று சுசித்ரா போனை துண்டித்து விடுகிறார்.

இதற்கு பயில்வான் ரங்கநாதன், பத்திரிகையில் வந்த கார்த்தி பேட்டியை வைத்துதான் அப்படி பேசினேன். அவர் சொன்ன தகவலைத்தான் சொன்னேன். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். அதையும் பேசுகிறேன்’ என்று கூறி சமாளிக்கிறார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in