வைரல் வீடியோ... வித்யாசாகர் மகனுடன் காதலில் விழுந்த சிவாங்கி?

சிவாங்கி- ஹர்ஷவர்தன்
சிவாங்கி- ஹர்ஷவர்தன்

இசையமைப்பாளர் வித்யாசாகர் மகனுடன் சிவாங்கி நெருக்கம் காட்டியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

’சூப்பர் சிங்கர்’, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சிவாங்கி. இந்தப் பிரபலத்தின் மூலம் சினிமாவிலும் நடிக்க களமிறங்கினார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்த சிவாங்கி தற்போது இசை ஆல்பத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் வித்யாசாகரின் மகனான ஹர்ஷவர்தனுடன் இணைந்து ஒரு ஆல்பம் பாடல் செய்து இருந்தார். அப்போது இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

இதனையடுத்து அந்த நட்பு காதலாக மாறி இருப்பதாக சொல்லப்படுகிறது. மீண்டும் இருவரும் இணைந்து ஆல்பம் பாடல் செய்து உள்ளனர். அதில் இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானது.

தாங்கள் காதலிக்கிறோம் என இருவரும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். 'குக் வித் கோமாளி’ நிகழ்வில் சிவாங்கி அஸ்வின் மீது காதல் வயப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை!

பகீர்... 81 கோடி இந்தியர்களின் ஆதார் தரவுகள் விற்பனை...  சிபிஐ விசாரணை!

இன்றே கடைசி தேதி... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மைதானத்தில் வீராங்கனைக்கு முத்தமிட்ட விவகாரம்... லூயிஸுக்கு 3 ஆண்டுகள் தடை!

பரபரப்பு… பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in