எங்கள் விவாகரத்துக்கு யார் காரணம்?... உண்மையை உடைத்த சைந்தவி!

சைந்தவி- ஜிவி பிரகாஷ்
சைந்தவி- ஜிவி பிரகாஷ்

’எங்கள் விவாகரத்தில் யாருடைய தலையீடும் இல்லை’ என பின்னணிப் பாடகி சைந்தவி தெரிவித்துள்ளார். நேற்று இதுதொடர்பாக, ஜி.வி.பிரகாஷ் விளக்கம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஜிவி பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து விஷயம் கடந்த சில நாட்களாகப் பேசுபொருளாகி வந்தது. இருவரும் தங்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்காக பேசி, புரிந்துகொண்ட பின்னரே இந்த முடிவு எடுத்தோம் என தெரிவித்தனர்.

இவர்கள் விவாகரத்து அறிவித்த பின்னர் அதற்குக் காரணம் இதுதான் எனப் பலவாறாக செய்திகள் பரவியது. ஜிவி பிரகாஷ் நடிக்க வந்தது சைந்தவிக்குப் பிடிக்கவில்லை என்றும், அவரது மாமியாருடன் பிரச்சினை எனவும் சொல்லப்பட்டது.

ஜிவி பிரகாஷ்- சைந்தவி
ஜிவி பிரகாஷ்- சைந்தவி

ஆனால், இதனை எல்லாம் மறுத்த ஜிவி பிரகாஷ் ‘என்னதான் பிரபலமாக இருந்தாலும் தங்களின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்’ எனக் கூறினார். மேலும், இதுபோல தவறான தகவல்களைப் பரப்புவது தங்களின் தனிப்பட்ட உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் அவர் சொன்னார்.

இப்போது சைந்தவியும் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ‘எங்களின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடாதீர்கள் என்று வேண்டுகோள் வைத்துமே பல யூடியூப் சேனல்கள் தவறான செய்திகளை பரப்பி வருவது வேதனை அளிக்கிறது.

எங்களுடைய விவாகரத்தில் யாருடைய தலையீடும் இல்லை. தனிப்பட்ட ஒருவரின் குணாதிசியத்தை தவறாக பேசுவது வருத்தமளிக்கிறது. எங்கள் இருவரின் வளர்ச்சிக்காக மட்டும்தான் இந்த முடிவை எடுத்தோம். பள்ளிப்பருவத்தில் இருந்தே நானும் ஜிவியும் 24 வருட நண்பர்கள். நாங்கள் பிரிந்தாலும் இந்த நட்பு இனிமேலும் தொடரும்’ எனக் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!

ஆன்ட்ராய்டு 15 அப்டேட்... மொபைல் திருடு போனால் உரிமையாளரை எச்சரிக்கும்; முக்கிய தகவல்களையும் பாதுகாக்கும்

கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

'அவங்களைக் கொலை செய்கிற எண்ணமே இல்லை'... ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in