கதாநாயகியாக அறிமுகமாகிறார் பாடகி ராஜலட்சுமி

கதாநாயகியாக அறிமுகமாகிறார் பாடகி ராஜலட்சுமி

நாட்டுப்புற பாடகியான ராஜலட்சுமி தமிழ் திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக நாட்டுப்புற பாடகர்களான செந்தில், ராஜலட்சுமி தம்பதியர் புகழ் பெற்றனர். கிராமத்து தெம்மாங்கு பாடல்கள் பாடுவதில் புகழ்பெற்ற இருவரும் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நிகழ்ச்சிகளில் பாடி வருகின்றனர். அத்துடன் திரைப்படப்பாடல்களையும் பாடி வருகின்றனர்.

இவர்கள் இருவரும் நடிகர் பிரபுதேவா நடித்த ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் பாடிய 'சின்ன மச்சான் செவத்த மச்சான்' பாடல் ஹிட்டடித்தது. இதையடுத்து 'புஷ்பா' படத்தில் ராஜலட்சுமி பாடி ‘வாயா சாமி’ பாடல் அவருக்கு திரையுலகில் புகழைப் பெற்றுத் தந்தது.

இந்த நிலையில் பாடகி ராஜலட்சுமி தமிழ் திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். கவுண்டமணி நடித்த ‘ எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தை இயக்கிய கணபதி பாலமுருகன் தற்போது 'லைசென்ஸ்' என்ற பெயரில் படத்தை இயக்குகிறார். நார்மல் ஃபிலிம் பேக்டரி சார்பாக இளஞ்செழியன் தனது நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். விஜய் பாரத், ராதாரவி, மதுரை ரிஷி உள்பட பலர் நடிக்கின்றனர்.

இப்படம் குறித்து ராஜலட்சுமி கூறுகையில், " இந்தப்படத்தில் பாரதி என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ராதாரவி போன்ற பெரிய நடிகர்களுடன் நடிப்பது எனக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுத்து இருக்கிறது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in