பிரபல பின்னணி பாடகி 2-வது திருமணம்: பள்ளி நண்பரை மணந்தார்!

பிரபல பின்னணி பாடகி 2-வது திருமணம்: பள்ளி நண்பரை மணந்தார்!

பிரபல பின்னணி பாடகி, தனது பள்ளி நண்பரை இன்று மறுமணம் செய்துகொண்டார்.

தமிழில், கஸ்தூரி மான் படத்தில் இடம்பெற்ற ’ஒரு போர்க்களம்’, தலைநகரம் படத்தில் ’ஏதோ நினைக்கிறேன்’, மாயக்கண்ணாடி படத்தில் ’ஒரு மாயலோகம் விரிந்து கிடக்கும்’ நெறஞ்ச மனசு படத்தில் ’தரிசா கிடக்குற பூமியில’ உட்பட பல பாடல்களை பாடியிருப்பவர் மலையாள பாடகி மஞ்சரி. தமிழ், மலையாளம், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

இளையராஜா, வித்யாசாகர், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ள இவர், பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவர், கடந்த 2009 -ம் ஆண்டு விவேக் என்பவரை திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

பாடகி மஞ்சரி,  ஜெரின்
பாடகி மஞ்சரி, ஜெரின்

இந்நிலையில், தன்னுடன் பள்ளியில் ஒன்றாக படித்த ஜெரின் என்பவரை பாடகி மஞ்சரி இன்று (ஜூன் 24) காலை திருமணம் செய்து கொண்டார். திருவனந்தபுரத்தில் நடந்த இந்தத் திருமணத் தில் இரு குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

திருமணம் பற்றிய வீடியோவை, மஞ்சரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ``என் வாழ்வில் இன்று முக்கியமான நாள். நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். மேஜிக் அகாடமியில் உள்ள சிறப்பு குழந்தைகளுடன் இன்றைய நாளைக் கழிக்க இருக்கிறோம். எங்கள் வாழ்க்கைக்கு உங்கள் பிரார்த்தனையும் ஆதரவும் தேவை'' என்று குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்குத் திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in