பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்

லதா மங்கேஷ்கர்
லதா மங்கேஷ்கர்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார். அவருக்கு வயது 92.

பிரபல இந்தி பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர். இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படும் இவர், இந்தி, மராத்தி, பெங்காலி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர், இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா, பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் தாதா சாகேப் பால்கே விருதுகளைப் பெற்றுள்ளார்.

கரோனா மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த மாதம் மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் உடல்நிலை மேம்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், கடந்த 29 நாட்களாக சிகிச்சை பெற்றுவரும் அவர், உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு செயற்கை சுவாசக் கருவி (வென்டிலேட்டர்) பொருத்தப்பட்டுள்ளது எனவும், அவர் இன்னும் ஐசியுவில்தான் இருக்கிறார் என்றும் தொடர்ந்து அவரை கண்காணித்து வருவதாகவும் மருத்துவர் பிரதித் சம்தானி நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவர் மறைவை அடுத்து, சமூக வலைதளங்களில் ரசிகர்களும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in