பிரபல பின்னணி பாடகர் மாரடைப்பால் மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல பின்னணி பாடகர் மாரடைப்பால் மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல பின்னணிப் பாடகர் கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் திடீரென மரணமடைந்தார். அவருக்கு வயது 53.

பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, தேவா, வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடியுள்ளார்.

கில்லி படத்தில் இடம்பெற்ற ‘அப்படி போடு’, செல்லமே படத்தில், ’காதலிக்கும் ஆசை இல்லை’, 7ஜி ரெயின்போ காலனி படத்தில் ‘நினைத்து நினைத்துப் பார்த்தேன்’, காக்க காக்க படத்தில், உயிரின் உயிரே உட்பட பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.

இவர், கொல்கத்தா நஸ்ருல் மன்சா ஆடிட்டோரியத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்றார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு தான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்குத் திரும்பினார். அங்கு திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மறைந்த கிருஷ்ணகுமார் குன்னத்-துக்கு ஜோதி என்ற மனைவியும் நகுல் கிருஷ்ணா என்ற மகன் தாமரா என்ற மகள் உள்ளனர்.

அவரது திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவர் மறைவுக்கு சமூக வலைதளங்களில் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in