பாடகி சின்மயிக்கு இன்ஸ்டா கொடுத்த அதிர்ச்சி

பாடகி சின்மயிக்கு இன்ஸ்டா கொடுத்த அதிர்ச்சி

பாடகி சின்மயிக்கு இன்ஸ்டாகிராம் திடீரென அதிர்ச்சி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல பின்னணி பாடகி சின்மயி. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். மீடூ புகார் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்திய சின்மயி, தமிழ், தெலுங்கு சினிமாவில் ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுத்தும் வருகிறார்.

இவர் 2014-ம் ஆண்டு நடிகரும், இயக்குநருமான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் இரட்டை குழந்தை பிறந்தது. ஆண் மற்றும் பெண் குழந்தைகளான இவர்களுக்கு த்ரிப்தா, ஷர்வாஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.

அந்தக் குழந்தைகளின் கைகளை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் சின்மயி. அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். அதற்கடுத்த நாளே, அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி குறிப்பிட்டுள்ள பாடகி சின்மயி, ’பல ஆண்கள் தனக்கு இன்ஸ்டாகிராம் நேரடி மெசேஜில் ( DM) ஆபாசப் புகைப் படங்களை அனுப்புகிறார்கள் என புகார் கூறி இருந்தேன். அப்படி அனுப்பியவர்களை விட்டுவிட்டு தனது கணக்கை இன்ஸ்டா நீக்கியுள்ளது’ என பேக்கப் ஐடியில் இருந்து பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in