`மற்றவர்கள் விலகினார்கள்; எனக்கு சமந்தா பக்கப்பலமாக இருந்தார்'- பாடகி சின்மயி உருக்கம்

சமந்தா & சின்மயி
சமந்தா & சின்மயி`மற்றவர்கள் விலகினார்கள்; எனக்கு சமந்தா பக்கபலமாக இருந்தார்'- பாடகி சின்மயி உருக்கம்

நடிகை சமந்தா பல கடினமான சமயங்களில் தனக்கு ஆதரவு கொடுத்ததாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

பின்னணிப் பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி கடந்த சில வருடங்களுக்கு முன்னால் பாடலாசிரியர் வைரமுத்து மீது ‘மீ டூ’ இயக்கத்தில் பாலியல் தொந்தரவு காரணமாக புகார் கொடுத்தார். இதனால், பல தரப்புகளில் இருந்து எதிர்ப்பும் தமிழ் சினிமாவில் பின்னணிக் குரல் கொடுக்க அவருக்குத் தடையும் அளிக்கப்பட்டது. இதுபோன்ற கடினமான சமயங்களில் நடிகை சமந்தா தனக்கு பக்கப்பலமாக இருந்ததை சின்மயி சமீபத்திய பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்துள்ளார்.

அவர் தெரிவித்திருப்பதாவது, ’நம் நாட்டில் பல காலமாக நடிகைகள் எதிர்கொண்டு வந்த பல தடைகளை கடந்து வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருப்பவர் சமந்தா. ’மீ டூ’ இயக்கத்தில் என்னுடன் துணை நின்றார். மற்றவர்கள் விலகியபோது கூட என் மீது நம்பிக்கை வைத்து எனக்காகவும் என் வேலைக்காகவும் பக்கபலமாக இருக்கிறார்’ எனத் தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தாவும் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பாடகி சின்மயியையும் அவருடய கணவர் ராகுலையும் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் தெரியும் எனவும் உண்மையான நட்பு என்றால் அதற்கு இவர்கள்தான் உதாரணம் எனவும் தன்னுடைய பல கடினமான சமயங்களில் அவர்கள் தங்கள் அன்பை காட்டியிருக்கிறார்கள் எனவும் தெரிவித்து இருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in