அனிருத்தை திருமணம் செய்து கொள்ள சம்மதம் - பளிச்சென சொன்ன பாடகி!

அனிருத் - ஜோனிடா
அனிருத் - ஜோனிடாKoushik

பின்னணி பாடகி ஜோனிடா காந்தி இசையமைப்பாளர் அனிருத்தை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.

தமிழில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘பீஸ்ட்’, ‘டான்’, ‘விக்ரம்’ என இந்த வருடத்தில் இவரது இசையில் அடுத்தடுத்து வெளியான திரைப்படங்கள் மற்றும் அவற்றின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

அனிருத் இசையில் ‘செல்லம்மா’, ‘அரபிக்குத்து’ என பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார் ஜோனிடா. அனிருத்- ஜோனிடா சேர்ந்து பாடிய பாடல்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், அனிருத்தை திருமணம் செய்து கொள்வது பற்றி ஜோனிடாவிடம் அவர் கலந்து கொண்ட விழா ஒன்றில் கேள்வி கேட்கப்பட்டது. அவரிடம், “சூர்யா, ரன்வீர் சிங், அனிருத் இவர்கள் மூவரில் யாரை திருமணம் செய்து கொள்ள விருப்பம்? இதற்கான பதிலை உடனே சொல்ல வேண்டும்” என கேட்கப்பட்டது.

அதற்கு ஜோனிடா சற்றும் யோசிக்காமல் உடனே, “அனிருத்” என பதிலளித்தார். இதற்கான காரணத்தையும் அவர் விளக்கி உள்ளார். “சூர்யா, ரன்வீர் இருவருக்கும் ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது. அனிருத் தான் திருமணம் ஆகாமல் இன்னும் பேச்சுலராக உள்ளார். அதனால் அவரை திருமணம் செய்து கொள்வேன்” என சிரித்துக் கொண்டே சொன்னார் ஜோனிடா. ஏற்கெனவே இவர்கள் இருவரும் டேட்டிங் செய்கிறார்கள் என்று தகவல் கசிந்த நிலையில், ஜோனிடா இவ்வாறு கூறியிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இது ஒருபுறமிருக்க, அனிருத்துக்கு விரைவில் திருமணம் எனவும் பிரபல தொலைக்காட்சி மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் மகளை தான் அவருக்கு நிச்சயம் செய்ய இருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியானது குறிப்பிடத் தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in