பிரபல இயக்குநரின் மனைவி மறைவு: திரையுலகத்தினர் இரங்கல்

பிரபல இயக்குநரின் மனைவி மறைவு: திரையுலகத்தினர் இரங்கல்

‘திக்கற்ற பார்வதி’, ‘சின்ன வாத்தியார்’, கமல்ஹாசன் நடித்த ‘ராஜபார்வை’, ‘பேசும்படம்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘காதலா காதலா’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’, ‘மகளிர் மட்டும்’ உட்பட பல படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாசராவ். கன்னடம், தெலுங்கு, இந்தியிலும் பல படங்களை இயக்கியுள்ளார்.

மனைவி லட்சுமி கல்யாணியுடன் சிங்கீதம் சீனிவாச ராவ்
மனைவி லட்சுமி கல்யாணியுடன் சிங்கீதம் சீனிவாச ராவ்

இவர் மனைவி லட்சுமி கல்யாணி. கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த இவர், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சென்னையில் நேற்றிரவு காலமானார். சிங்கீதம் சீனிவாசராவின் திரை வாழ்க்கையில் முக்கியப் பங்காற்றியவர் லட்சுமி கல்யாணி. இதன் காரணமாகவே தனது மனைவி பற்றி ’ஸ்ரீகல்யாணியம்’ என்ற நூலை சிங்கீதம் எழுதியுள்ளார்.

லட்சுமி கல்யாணியின் மறைவை அடுத்து, தமிழ், தெலுங்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in