காதலில் விழுந்த பாடகர் அறிவு: இன்ஸ்டாவில் காதலியை அறிமுகப்படுத்தினார்

காதலில் விழுந்த பாடகர் அறிவு:  இன்ஸ்டாவில் காதலியை அறிமுகப்படுத்தினார்

‘என்ஜாய் என்சாமி’ புகழ் பாடகர் அறிவு இன்ஸ்டாகிராமில் தனது காதலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

‘தெருக்குரல்’ பாடல் மூலமாகப் பரவலாக அறியப்பட்டவர் பாடலாசிரியர் அறிவு. ஒடுக்கப்பட்ட மக்களின் வலி குறித்து அவரின் பல பாடல்கள் கவனம் பெற்றது. இது போன்ற தனிப்பாடல்கள் மட்டுமல்லாமல், சினிமாவிலும் பல பாடல்களை எழுதிப் பாடியிருக்கிறார் அறிவு.

மேலும் இயக்குநர் பா. ரஞ்சித்தின் 'காலா' படத்தின் மூலம் திரைத்துறையில் பாடகராக அறிமுகமானார். 'மாஸ்டர்' படத்தில் விஜய்க்காக வாத்தி ரெய்டு பாடலையும் இவர் பாடியிருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ’எஞ்சாய் எஞ்சாமி’ தனிப்பாடலை அறிவு எழுதி இருந்தார். இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, அறிவு மற்றும் தீ இணைந்து பாடியிருந்தனர். இந்நிலையில், இந்த பாடல் பலரது பாராட்டுகளையும் கவனத்தையும் பெற்ற நிலையில் அமெரிக்காவின் டைம்ஸ் ஸ்கொயர் பில் போர்ட்டில் இடம் பெற்றது.

இந்நிலையில் அறிவு தன் காதலியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த பதிவில், " பல மைல்கள் ஒன்றாகவே பயணிப்போம். பழங்குடியினரை மூர்க்கத்தனமாக நேசிக்கும் காதலர்கள் நாங்கள்" எனத் தனது காதலி கல்பனா அம்பேத்கரை அறிமுகப்படுத்தியுள்ளார். இருவரின் கால்கள் மட்டுமே தெரியும் புகைப்படத்தைப் பகிர்ந்து தன் காதலை உறுதிப்படுத்தியுள்ளார் அறிவு.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in