`பத்துதல’ இசை வெளியீட்டு விழாவில் சிம்புவின் வீடியோ!

‘பத்துதல’
‘பத்துதல’சிம்பு...

‘பத்துதல’ இசைவெளியீட்டு விழாவில் நடிகர் சிலம்பரசனின் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் வீடியோ ஸ்பெஷலாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடியத் திரைப்படம் ‘பத்துதல’. இந்த மாத இறுதியில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இதனை அடுத்து மார்ச் இரண்டாவது வாரத்தில் மிகப் பிரம்மாண்டமாக இதன் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இசை வெளியீட்டு விழாவில் ‘பத்துதல’ படத்திற்காக நடிகர் சிலம்பரசன் எப்படி தன் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றியிருக்கிறார், அதற்கான உடற்பயிற்சிகள் எப்படி எல்லாம் செய்திருக்கிறார் என்பது போன்ற விஷயங்கள் கொண்ட வீடியோவை இந்த இசைவெளியீட்டு விழாவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

கடந்த கொரோனா சமயத்தில் நடிகர் சிம்பு உடல் எடையைக் குறைக்க வீட்டில் இருந்து ஆரம்பித்து கேரளாவில் சிறப்பு சிகிச்சைப் பெற்றது வரை என அவரது வீடியோ அப்போது வைரலானது. சமீபத்தில் கூட தனது டயட் திட்டம் வொர்க்கவுட் சார்ட் ஆகியவற்றை சிம்பு சமூகவலைதளத்தில் வெளியிட்டு இருந்தார். இதனால், ‘பத்துதல’ இசைவெளியீட்டு விழாவில் அவரது இந்த ட்ரான்ஸ்ஃபர்மேஷன் வீடியோ குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in