ஏப்ரலில் வெளியாகிறது ‘வெந்து தணிந்தது காடு’

ஏப்ரலில் வெளியாகிறது ‘வெந்து தணிந்தது காடு’

சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு' படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் படம், ’வெந்து தணிந்தது காடு’. வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சித்தி இட்னானி (Siddhi Idnani) ஹீரோயினாக நடிக்கிறார். ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் சிம்பு ஐந்து கெட்-அப்களில் நடிக்கிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடந்துவருகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டு வருவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. விஜய் நடித்த ‘பீஸ்ட்’, ராஜமெளலியின் ’ஆர்ஆர்ஆர்’ படங்களும் ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதாகக் கூறப்படுவதால், போட்டி கடுமையாக இருக்கும் என்று திரையுலகினர் கூறுகின்றனர்.

’வெந்து தணிந்தது காடு’ படத்தை அடுத்து, கிருஷ்ணா இயக்கும் ’பத்து தல’, கோகுல் இயக்கும் ’கொரோனா குமார்’ ஆகிய படங்களில் நடிக்கிறார் சிம்பு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in