இன்று இரவு வெளியாகிறது சிம்புவின் 'பத்து தல' டிரெய்லர்: எகிறும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு!

நடிகர் சிம்பு
நடிகர் சிம்புசிம்புவின் 'பத்து தல' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் - படக்குழு அறிவிப்பு..!

சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள ’பத்து தல’ படத்தின் டிரெய்லர் இன்று இரவு 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஞானவேல் ராஜா தயாரிப்பில் கிருஷ்ண இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள படம் ’பத்து தல’. இந்த படத்தில் சிம்புக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்தநிலையில் படத்தின் டிரெய்லர் இன்று இரவு 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், டிரெய்லரை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் படக்குழுவின் சூப்பர் அப்டேட் சிம்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in