சிம்புவின் `பத்து தல’அப்டேட்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சிம்புவின் `பத்து தல’அப்டேட்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சிம்பு நடித்துள்ள ’பத்து தல’ படத்தின் அடுத்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ’வெந்து தணிந்தது காடு’ செப்டம்பர் 15-ம் தேதி வெளியாக இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. சிம்பு கவுரவ வேடத்தில் நடித்துள்ள ’மஹா’ வரும் 22-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படத்தை, சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய ஒப்பிலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். இது கன்னடத்தில் ஹிட்டான, ’முப்தி’ என்ற படத்தின் ரீமேக். சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி நடித்திருந்த இந்தப் படத்தை நரதன் இயக்கி இருந்தார்.

’பத்து தல’ படத்தில் சிம்புவுடன் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன், டிஜே அருணாச்சலம் உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். சிம்பு அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில் இந்தப் படம் டிசம்பர் 14-ம் தேதி வெளியாகும் என ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. மாநாடு படத்தை அடுத்து சிம்பு நடித்துள்ள 3 படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in