சிம்பு படத்தின் புதிய ரிலீஸ் தேதி!

சிம்பு படத்தின் புதிய ரிலீஸ் தேதி!

சிம்பு நடித்துள்ள நடித்துள்ள 'மகா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை ஹன்சிகாவின் 50-வது படம், ’மஹா’. இதில் சிலம்பரசன் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ஶ்ரீகாந்த், கருணாகரன், சனம் ஷெட்டி, தம்பி ராமையா, பேபி மானஸ்வி உட்பட பலர் நடித்துள்ளனர். யு.ஆர். ஜமீல் இயக்கியுள்ள இந்தப் படத்தை, எலெட்க்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் வி.மதியழகன், மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் டத்தோ அப்துல் மாலிக் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஜிப்ரான் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஜே. லக்‌ஷ்மண் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிந்துவிட்டாலும் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூலை 22-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. தமிழ்நாட்டு விநியோக உரிமையை ஆன்ஸ்கை (ONSKY) என்ற நிறுவனம் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in