தீபாவளி ரேஸில் இணையும் ‘மாநாடு’

மாநாடு
மாநாடு

இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக ‘அண்ணாத்த’ திரைப்படமும், ‘வலிமை’ திரைப்படமும் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், தற்போது இந்த ரிலீஸ் வரிசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ திரைப்படமும் இணைந்துள்ளது.

முக்கியமான பெரிய நடிகர்கள் படம் ஒரேநாளில் வெளியானால், எங்கள் வருவாய் பாதிக்கப்படும் என்று ஒரு வருட காலம் திரையரங்கங்கள் திறக்காமல் நஷ்டத்திலிருக்கும் திரையரங்க உரிமையாளர்கள் புலம்பிவரும் நிலையில், தீபாவளியன்று ‘மாநாடு’ திரைப்படம் வெளியிடப்படும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in