`சிம்புக்கு விரைவில் திருமணம் நடக்கும்'- காஞ்சி கோயிலில் தரிசனம் செய்த டி.ராஜேந்தர் தகவல்

`சிம்புக்கு விரைவில் திருமணம் நடக்கும்'- காஞ்சி கோயிலில் தரிசனம் செய்த டி.ராஜேந்தர் தகவல்

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில் மற்றும் காமாட்சி அம்மன் திருக்கோயிலில் இலட்சிய திமுக தலைவரும் நடிகருமான டி.ராஜேந்தர் சாமி தரிசனம் செய்தார்.

அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவிட்டு தாயகம் திரும்பிய டி.ராஜேந்தர் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில், காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலுக்கு நடிகர் டி.ராஜேந்தர் நேற்று வந்தார். அப்போது, தனது மகன் சிலம்பரசனின் ஜாதகத்தை வைத்துச் சிறப்பு அர்ச்சனை மேற்கொண்டார். இதனை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர், தான் மறுபிறவி எடுத்துள்ளதாகவும், கடந்த முறை பீப் பாடல் பிரச்சினையின் போது இங்கு வந்து தனது குறைகளை வழக்கறுத்தீஸ்வரரிடம் கோரிக்கையாக வைத்த நிலையில், சுமுகமாக பிரச்சினை தீர்ந்தது என்றார்.

நடிகர் சிலம்பரசனின் திருமணம் குறித்த கேள்விக்கு, எனக்கு எனது மனைவிக்குப் பிடித்த பெண் என்பதைத் தவிர்த்து எனது மகன் சிலம்பரசனுக்கு பிடித்த திருமகளை தேர்வு செய்யும் பொறுப்பை இந்த வழக்கறுத்தீஸ்வரிடமே விட்டு அது குறித்த கோரிக்கையை வைத்துள்ளேன். இந்த கோரிக்கையை அவர் சிறப்பாக நிறைவேற்றுவார். இதேபோல் சிலம்பரசன் திருமணத்தை அவரது ரசிகர்கள் உள்ளிட்ட நல் உள்ளங்கள் அனைவரும் ஆதரவுடன் விரைவில் நடக்கும் என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in