பெரிய தொகையுடன் வந்த ஆஃபர்: அதிரடியாக மறுத்த சிம்பு!

பெரிய தொகையுடன் வந்த ஆஃபர்: அதிரடியாக மறுத்த சிம்பு!

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள ’வெந்து தணிந்தது காடு’படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இதில் சித்தி இட்னானி நாயகியாக நடித்துள்ளார். மற்றும் ராதிகா, சித்திக், நீரஜ் மாதவ் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 15-ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்போது, ஒப்பிலி கிருஷ்ணா இயக்கும் ’பத்து தல’படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் சிம்பு மதுபான விளம்பரத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. பன்னாட்டு மதுபான நிறுவனம் ஒன்று தங்கள் விளம்பரத்தில் நடிக்க சிம்புவை அணுகியிருக்கிறது. இதற்காக அவருக்குப் பெரிய தொகையை தரவும் அவர்கள் முன் வந்துள்ளனர். ஆனால், சிம்பு அந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து சமூக வலைதளங்களில், நெட்டிசன்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

முன்னதாக, கே.ஜி.எஃப் ஹீரோ யாஷ், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் உட்பட சில நடிகர்கள் மதுபான விளம்பரங்களில் நடிக்க மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in