பஸ் விளம்பரத்தில் இறங்கிய சிம்பு... வைரலாகும் வீடியோ!

நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு பேருந்து விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது

மாநாடு படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த நடிகர் சிம்பு, தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்து கோலிவுட்டில் விட்ட கொடியை மீண்டும் பிடித்தார். அதை தொடர்ந்து, தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க சிம்பு ஒப்பந்தமாகியுள்ளார்

நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு

தேசிங்கு பெரியசாமி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படக்குழுவின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், பஸ் முன்பதிவு ஆப் விளம்பரம் ஒன்றில் சிம்பு நடித்துள்ளார். இந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in