`சட்டம் என் கையில்' ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிம்பு!

`சட்டம் என் கையில்' ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிம்பு!

மாறுபட்ட தோற்றத்தில் நடிகர் சதீஷ் நடிக்கும் “சட்டம் என் கையில்” ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிலம்பரசன் வெளியிட்டார்.

க்ரிஷ் இன்டர்நேஷனல் பிலிம் கிரியேசன், சீட்ஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் சண்முகம் கிரியேசன் இணைந்து தயாரிக்க, நடிகர் சதீஷ் நடிக்கும் த்ரில்லர் திரைப்படம் “சட்டம் என் கையில்”. இப்படத்தை ‘சிக்சர்’ படப்புகழ் இயக்குநர் சாச்சி இயக்கியுள்ளார். இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிலம்பரசன் வெளியிட்டார்.

"பிரபல காமெடி நடிகர் சதீஷை மாறுபட்ட தோற்றத்தில் காட்ட வேண்டும் என்று நினைத்தேன். நடிகர் சதீஷ் காமெடி மட்டுமே செய்யக் கூடியவர் அல்ல, அவரின் திறமையை, அவரது வேறொரு பரிமாணத்தை “சட்டம் என் கையில்” படத்தில் பார்க்கலாம்" என்று இயக்குநர் சாச்சி கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "இந்த படம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. மென்மையாக ஆரம்பிக்கும் படம். அனைத்து மக்களையும் எளிதில் கவரும் படியாக, கமர்ஷியல் த்ரில்லராக இப்படம் இருக்கும். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஒரு பிரபலம் வெளியிட்டால் நன்றாக இருக்குமென நடிகர் சிலம்பரசனை அணுகினோம். உடனே ஒப்புக் கொண்டு, படத்தை பாராட்டி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். அவருக்கு இந்த நேரத்தில் எங்களது படக்குழுவினர் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.

Related Stories

No stories found.