`உங்களால் மட்டும் தான் இப்படி படம் எடுக்க முடியும்'- `வெந்து தணிந்தது காடு' இயக்குநரை பாராட்டிய சிம்பு

`உங்களால் மட்டும் தான் இப்படி படம் எடுக்க முடியும்'- `வெந்து தணிந்தது காடு' இயக்குநரை பாராட்டிய சிம்பு

`வெந்து தணிந்தது காடு' படத்தை பார்த்த நடிகர் சிம்பு, "இந்த மாதிரி படம் எடுக்க உங்களால் மட்டும் தான் முடியும்" என்று இயக்குநரை பாராட்டியிருக்கிறார்.

நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். தந்தைக்காக மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளை நடிகர் சிம்பு செய்திருந்தார். தற்போது, டி.ராஜேந்தர் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தந்தையை ஓய்வெடுக்க வைத்துவிட்டு நாடு திரும்பினார் நடிகர் சிம்பு.

தந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவில் சில நாட்கள் சிம்பு இருந்து விட்டதால் அவர் நடிப்பில் உருவாகியுள்ள `வெந்து தணிந்தது காடு' படத்தின் வேலைகள் பாதிலேயே நின்றுவிட்டது. சென்னை திரும்பி சிம்பு படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்து கொடுத்துவிட்டார். இதனிடையே, படத்தை பார்த்த சிம்பு மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

அந்த அளவுக்கு படம் மிகவும் பிரமாதமாக வந்திருக்கிறது என்கிறது படக்குழு. படத்தின் மேக்கிங் பற்றி பேசிய சிம்பு, இயக்குநர் கௌதம் மேனனை கட்டிப்பிடித்து தன் மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல், "இந்த மாதிரி படம் எடுக்க உங்களால் மட்டும் தான் முடியும்" என்று இயக்குநரை பாராட்டியிருக்கிறார் சிம்பு.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in