கிளாஸிக் லுக்கில் சிம்பு... வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு

கமல்ஹாசன் தயாரிப்பில் புதிய திரைப்படத்தில் நடித்து வரும் சிம்புவின், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் பிரபலமான தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகிறது.

நடிகர் கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. தற்போது இந்த படத்திற்கான லோகேஷன் பார்க்கும் பணியில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ஈடுபட்டுள்ளார்.

பிரம்மாண்ட வரலாற்று படமாக உருவாகும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என ஐந்து மொழியில் பான் இந்தியா திரைப்படமாக ஏற்படும் உருவாக உள்ளது.‌

நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு

பெயரிடப்படாத இப்படத்தின் லுக் டெஸ்ட் சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில், சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in