அடுத்து சிம்பு நடிக்க விரும்பும் கதாபாத்திரம் இதுதான்!

நடிகர் சிம்பு
நடிகர் சிம்புஅடுத்து சிம்பு நடிக்க விரும்பும் கதாபாத்திரம் இதுதான்!

‘பத்துதல’ படத்திற்குப் பிறகு நடிகர் சிம்பு ஆக்‌ஷன் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

‘மாநாடு’ படத்திற்குப் பிறகு சினிமா பயணத்தில் தனது செகண்ட் இன்னிங்ஸை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளார் நடிகர் சிலம்பரசன். ‘மாநாடு’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்தது. தற்போது இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ள ‘பத்துதல’ படம் மீதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருப்பதாக படக்குழு நேற்று சென்னையில் நடந்த டீசர் வெளியீட்டு விழாவில் தெரிவித்தது. ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் லைவ்வாக பாடல்களும் பாட இருக்கிறார்.

தற்போது பாங்க்காங்கில் மார்ஷியல் ஆர்ட் பயிற்சியில் பிஸியாக இருக்கும் சிம்பு சென்னைக்கு வரும் 15-ம் தேதியே வந்துவிடுவார் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் டப்பிங் பணிகள் முழுவதையும் பாங்க்காங்கில் இருந்தே முடித்துக் கொடுத்திருக்கிறார் சிம்பு. ‘பத்துதல’ படத்திற்குப் பிறகு ஆக்‌ஷன் தொடர்பான படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க இருப்பதாகவும் அதற்காகவே சிம்பு மார்ஷியல் ஆர்ட் பயின்றிருக்கிறார் எனவும் சொல்கிறார்கள். ‘கொரோனா குமார்’ படத்தில் சிம்பு இருக்கிறாரா இல்லையா என்பது இன்னும் தெளிவுப்படுத்தப்படாத நிலையில், பாங்க்காங்கில் இருந்து சென்னை வந்ததும் அவரது அடுத்தப் படம் குறித்தான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in