சிம்பு - ஹன்சிகாவின் ’மகா’ ரிலீஸ் எப்போது?

சிம்பு - ஹன்சிகாவின் ’மகா’ ரிலீஸ் எப்போது?

சிம்பு கவுரவ வேடத்தில் நடித்துள்ள, ’மகா’ படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை, ஆன்ஸ்கை நிறுவனம் பெற்றுள்ளது.

நடிகை ஹன்சிகா பிரதான வேடத்தில் நடித்துள்ள படம் ’மகா’. இது அவருக்கு 50-வது படம். இதில் சிலம்பரசன் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ஶ்ரீகாந்த், கருணாகரன், சனம் ஷெட்டி, தம்பி ராமையா, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஹன்சிகா, இயக்குநர் ஜமீல், சிம்பு
ஹன்சிகா, இயக்குநர் ஜமீல், சிம்பு

யு.ஆர். ஜமீல் இயக்கும் இந்தப் படத்தை, எலெட்க்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் வி. மதியழகன், மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் டத்தோ அப்துல் மாலிக்குடன் இணைந்து தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஜே. லக்‌ஷ்மண் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் தமிழ்நாட்டு விநியோக உரிமையை ஆன்ஸ்கை (ONSKY) என்ற நிறுவனம் பெற்றுள்ளது. இதையடுத்து இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in