ரசிகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ள சிம்பு

ரசிகர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ள சிம்பு

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாநாடு’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ‘டைம் லூப்’ கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. நீண்ட நாட்கள் கழித்து சிம்புவை ஒரு நல்ல திரைப்படத்தில் பார்க்கப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருக்கும் அவரது ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை அறிவித்துள்ளார் சிம்பு.

சிம்புவின் ரசிகர் மன்றம் கடந்த பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. அந்த ரசிகர் மன்றத்தின் நடவடிக்கைகளை அவரது தந்தை டி.ராஜேந்தரும், சிற்றப்பா டி.வாசுவும் நிர்வகித்து வருகிறார்கள். இந்த நிலையில், சிம்பு தனது ரசிகர் மன்றத்தை விரிவு படுத்த தீர்மானித்திருக்கிறார்.

இது தொடர்பாகச் சிம்பு வெளியிட்ட அறிக்கையில், “இயற்கையின் செயல்களால் நீண்ட நாட்களாக உங்களை நேரடியாகச் சந்திக்காமல் தொலைப்பேசி வழியாகவே பேசி வந்தோம். இப்போது இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி, கலை இலக்கிய அணியின் மூலம் நற்பணி மன்றத்தின் பணிகளை விரிவுபடுத்த உள்ளோம். இது சம்பந்தமாக நடக்கவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் மாநில, மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.