சிம்பு திருமணம் எப்போது?: அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய டி.ராஜேந்தர் பரபரப்பு தகவல்

சிம்பு திருமணம் எப்போது?: அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய டி.ராஜேந்தர் பரபரப்பு தகவல்

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சையை முடித்துக் கொண்டு டி.ராஜேந்தர் சென்னை திரும்பினார்.

நடிகரும், இயக்குநருமான டி. ராஜேந்தருக்கு கடந்த மே மாதம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், இதயத்துக்குச் செல்லக் கூடிய ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதைக் கண்டறிந்தனர். வயிற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள ரத்தக் கசிவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து டி.ராஜேந்தர் கடந்த ஜூன் 14 அன்று குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு டி.ராஜேந்தர் குடும்பத்துடன் ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை சென்னை திரும்பினார்.

அவருக்கு லட்சிய திமுக தொண்டர்களும், ரசிகர்களும் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் பேசிய டி.ராஜேந்தர், ‘’என் மீது அன்பு காட்டிய தமிழக மக்களுக்கு நன்றி. அவர்கள் பிரார்த்தனையின் பலன் நான் திரும்பியிருக்கிறேன். அமெரிக்க தமிழ் சங்க உறுப்பினர்கள் அனைவரும் என் மீது பொழிந்த அன்பை நான் வார்த்தையால் வர்ணிக்க முடியாது. என் மீது இந்தியர்கள் அங்கு ஊட்டிய அன்பு பிரமிக்க வைத்தது.’’ என்றார்.

அவரிடம் ’சிம்புவின் திருமணம் எப்போது?’ என்று சிலர் கேட்டனர். அதற்கு, திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட வேண்டும். அது நம் கையில் இல்லை. இறைவன் நிச்சயித்தால் நிச்சயம் நடைபெறும். அவரின் நல்ல மனசுக்கு இறைவன் நல்ல மணமகளை என் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று வேண்டுகிறேன்’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in