அடுத்த ஷெட்யூல்: சிம்புவின் `பத்து தல’ அப்டேட்!

அடுத்த ஷெட்யூல்: சிம்புவின் `பத்து தல’ அப்டேட்!

’பத்து தல’ படப்பிடிப்பில் வரும் 27-ம் தேதி முதல் நடிகர் சிலம்பரசன் கலந்துகொள்கிறார்.

சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி நடித்து கன்னடத்தில் வெளியான படம், ’முஃப்தி’. இந்தப் படத்தை நரதன் இயக்கி இருந்தார். இந்தப் படம் தமிழில் ’பத்து தல’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. 'சில்லுனு ஒரு காதல்', ’நெடுஞ்சாலை’ படங்களை இயக்கிய ஒப்பிலி என். கிருஷ்ணா இயக்குகிறார். இதில் சிலம்பரசன், கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர். சிலம்பரசன் கேங்ஸ்டராக நடிக்கிறார்.

பிரியா பவானி சங்கர், கலையரசன், டிஜே அருணாச்சலம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கும் இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் காட்சிகளின் ஷூட்டிங் ஏற்கெனவே முடிந்துவிட்டது. சிலம்பரசன் நடிக்கும் காட்சிகள் பாக்கி இருந்தது.

அவர் ’வெந்து தணிந்தது காடு’ படத்தில் பிசியாக இருந்ததால், இதில் தொடர முடியவில்லை. இந்நிலையில் வரும் 27-ம் தேதி முதல் இதன் படப்பிடிப்பில் சிலம்பரசன் கலந்துகொள்கிறார். ஜூலை மாதம் வரை இந்தப் படத்தில் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in