தேசிங்கு பெரியசாமியுடன் இணையும் சிலம்பரசன்?

நடிகர் சிலம்பரசன்
நடிகர் சிலம்பரசன்தேசிங்கு பெரியசாமியுடன் இணையும் சிலம்பரசன்?

நடிகர் சிலம்பரசன் தன்னுடைய அடுத்தப் படத்திற்கு இயக்குநர் தேசிங்கு பெரியசாமியுடன் இணைய இருக்கிறார்.

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிலம்பரசனின் ‘பத்துதல’ திரைப்படம் இந்த மாதம் இறுதியில் வெளியாக இருக்கிறது. மணல் மாஃபியா கிங்காக இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்து இருக்கிறார். இந்தப் படத்தை அடுத்து நடிகர் சிலம்பரசன், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குநர் தேசிங்கு பெரியசாமியுடன் இணைய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க, கமல்ஹாசன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது. அதிக பொருட்ச்செலவில் உருவாக இருக்கக்கூடிய இந்தத் திரைப்படம் ஒரு பீரியாடிக் ட்ராமாவாக வர இருக்கிறது. இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்த மாத இறுதியில் வெளியாகும் ‘பத்துதல’ படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் இரண்டாவது வாரத்தில் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in