சிம்பு பிறந்தநாளில் துபாய் அரசு கொடுக்கும் பரிசு!

நடிகர் சிலம்பரசன்
நடிகர் சிலம்பரசன்

நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு, துபாய் அரசு அவருக்கு சிறப்பு பரிசை வழங்குகிறது.

நடிகர் சிலம்பரசன் நடித்து வெளியான, ’மாநாடு’ படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை அடுத்து, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் 'வெந்து தணிந்தது காடு', 'சில்லுனு ஒரு காதல்' கிருஷ்ணா இயக்கும் 'பத்து தல' படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து கோகுல் இயக்கும் 'கொரோனா குமார்' படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் சிலம்பரசனுக்கு இன்று பிறந்தநாள். இதுகுறித்து அவர் நண்பர் மகத் கூறும்போது, “சிம்பு, இப்போது துபாய் சென்றுள்ளார். அவருக்கு துபாய் அரசு கோல்டன் விசா வழங்கி இருக்கிறது. அதைப் பெறுவதற்காக அங்கு சென்றுள்ளார். அதோடு தனது பிறந்தநாளையும் அங்குதான் அவர் கொண்டாட இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, 'பத்து தல' படக்குழு போஸ்டர் மற்றும் பத்து தல திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டராக சிலம்பரசன் நடிக்கிறார். இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படக்குழு வெளியிட்ட கிளிம்ப்ஸ் வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in