மலையாளப் படத்தின் ரீமேக்கில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா?

சிம்பு, எஸ்.ஜே.சூர்யா
சிம்பு, எஸ்.ஜே.சூர்யா

’மாநாடு’ படத்தை அடுத்து சிம்புவும் எஸ்.ஜே.சூர்யாவும் மீண்டும் ஒரு படத்தில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன், பிரேம்ஜி அமரன் உட்பட பலர் நடித்த படம் ’மாநாடு’. சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் சிம்பு- எஸ்.ஜே.சூர்யா நடிப்பு பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில் இவர்களை மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

சிம்பு, எஸ்.ஜே.சூர்யா
சிம்பு, எஸ்.ஜே.சூர்யா

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம், ’டிரைவிங் லைசன்ஸ்’. பிருத்விராஜ், சுராஜ் வெஞ்சரமூடு, மியா ஜார்ஜ், சைஜூ குரூப் உட்பட பலர் நடித்த இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை மறைந்த இயக்குநர் சச்சி எழுதி இருந்தார். லால் ஜூனியர் இயக்கி இருந்தார். ஒரு ஹீரோவுக்கும் அவர் ரசிகரான மோட்டார் வாகன ஆய்வாளருக்கும் இடையே நடக்கும் சுகமான ஈகோ மோதல்தான் இதன் கதை.

மலையாளத்தில் இந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து, இந்தியில் ரீமேக் ஆகிறது. ’செல்ஃபி’ என்ற பெயரில் ரீமேக் ஆகும் அப்படத்தில் அக்‌ஷய்குமாரும், இம்ரான் ஹாஸ்மியும் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பெற்றிருப்பதாகவும் அதில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in