`அப்போ பேசினோம், இப்போ நிறைவேறிடுச்சு’: இயக்குநர் அருண்குமார்

`அப்போ பேசினோம், இப்போ நிறைவேறிடுச்சு’: இயக்குநர் அருண்குமார்
சித்தார்த், அருண்குமார்

அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் பழனி அருகே நடந்துவருகிறது.

விஜய் சேதுபதி நடித்த 'பண்ணையாரும் பத்மினியும்' , 'சேதுபதி', 'சிந்துபாத்' படங்களை இயக்கியவர் எஸ்.யு.அருண்குமார். இவர் இப்போது சித்தார்த் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதை, ’காதலில் சொதப்புவது எப்படி’, ’ஜில் ஜங் ஜக்’, ’அவள்’ படங்களைத் தயாரித்த இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

’பண்ணையாரும் பத்மினியும் படம் பண்ணும்போதே சித்தார்த்தை தெரியும். இருவரும் இணைந்து பணியாற்றுவது பற்றி பேசினோம். அது இப்போது நிறைவேறி இருக்கிறது. கரோனா காரணமாக இந்தப் படம் தொடங்குவதில் தாமதம் ஆனது. இப்போது பழனியின் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம்’ என்றார் அருண்குமார். படத்தின் ஜானர் மற்றும் சித்தார்த் கேரக்டர் பற்றி இப்போது சொல்ல மாட்டாராம்

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் இந்தப் படம் உருவாகி வருகிறது. ‘கிளாசிக் சினிமாவாக இருக்கும்’ என்கிறது படக்குழு.

Related Stories

No stories found.