நடிகை சுப்ரா ஐயப்பாவுக்குத் மாலத்தீவில் திருமண நிச்சயதார்த்தம்!

`ஆச்சரியமாக இருக்கிறது' என்கிறார்
நடிகை சுப்ரா ஐயப்பா
நடிகை சுப்ரா ஐயப்பா

நடிகை சுப்ரா ஐயப்பாவுக்கு தனது காதலருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

கன்னட நடிகை சுப்ரா ஐயப்பா. மாடலான இவர் தமிழில் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்த ’சகாப்தம்’ படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார். இப்போது ஆகன்யா என்ற படத்தில் நடித்து வருகிறார். திம்மய்யா அண்ட் திம்மய்யா, ராவண அவதாரா ஆகிய கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.

இவரும் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் விஷால் சிவப்பா என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவருக்கும் மாலத்தீவில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

தொழிலதிபர் விஷால் சிவப்பாவுடன் சுப்ரா ஐயப்பா
தொழிலதிபர் விஷால் சிவப்பாவுடன் சுப்ரா ஐயப்பா

இதுபற்றி நடிகை சுப்ரா ஐயப்பா கூறும்போது, ``எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. விஷால் மாலத்தீவு செல்லலாம் என்றார். சென்றோம். அங்கு இரவு உணவுக்கு முன்பதிவு செய்திருந்தோம். எனக்குப் பிடித்த உடை அணிந்து சென்றேன். அந்த இடம் மிகவும் அழகாக இருந்தது. மெழுகுவர்த்திகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு முழங்காலிட்டு, ’என்னைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமா?’ என்று மோதிரத்தை நீட்டினார், விஷால். அது இருவருக்கும் மிகவும் உணர்ச்சிகரமான தருணம்.

எங்கள் திருமணம் பற்றி இப்போது சொல்ல இயலாது. திருமணத்தைப் பெரிய கொண்டாட்டமாக நடத்த உள்ளோம். எங்களுக்கு வெளிநாட்டில் அதிக நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களும் வரவேண்டும். அதனால், கரோனா நிலைமையை பொறுத்து அதை முடிவு செய்ய காத்திருக்கிறோம்’' என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in