’நாங்க ஏற்கனவே கல்யாணம் பண்ணிட்டோம்’: ஸ்ருதி காதலர் திடீர் தகவல்

’நாங்க ஏற்கனவே கல்யாணம் பண்ணிட்டோம்’: ஸ்ருதி காதலர் திடீர் தகவல்
சாந்தனு ஹசாரிக்கா, ஸ்ருதிஹாசன்

``திருமணம் செய்துகொண்டவர்களாகவே நாங்கள் எங்களை உணர்கிறோம்'' என நடிகை ஸ்ருதி ஹாசனின் காதலர் தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ருதிஹசன், தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். வெப் தொடர்களிலும் நடிக்கிறார். இப்போது பிரபாஸ் ஜோடியாக ’சலார்’ படத்தில் நடித்து வருகிறார். பிரசாந்த் நீல் இயக்கும் இந்தப் படம், பான் இந்தியா படமாக உருவாகிறது. அடுத்து பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி படங்களில் நடிக்க இருக்கிறார்.

சாந்தனு ஹசாரிக்கா, ஸ்ருதிஹாசன்
சாந்தனு ஹசாரிக்கா, ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன், லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். இந்நிலையில், டூடுல் கலைஞர், சாந்தனு ஹசாரிக்கா என்பவரை ஸ்ருதிஹாசன் காதலிக்கத் தொடங்கினார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

சாந்தனு ஹசாரிக்கா, ஸ்ருதிஹாசன்
சாந்தனு ஹசாரிக்கா, ஸ்ருதிஹாசன்

இந்நிலையில் சாந்தனு அளித்துள்ள பேட்டி ஒன்றில், காதலை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்ல திட்டம் வைத்திருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு, ’நாங்கள் கிரியேட்டிவாக ஏற்கனவே திருமணம் செய்துகொண்டோம்’ என்று கூறியுள்ளார்.

’நாங்கள் திருமணம் செய்து கொண்டவர்களாகவே உணர்கிறோம். எங்கள் பந்தம் வலுவானது. நாங்கள் ஆக்கப்பூர்வமான விஷயங்களை இணைந்து உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட படைப்பாளிகள். திருமணம் என்று வரும்போது அதுபற்றி எனக்குத் தெரியவில்லை. வாழ்க்கை எப்படி செல்கிறது என்று பார்க்கலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in