நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு கரோனா பாதிப்பு

நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு கரோனா பாதிப்பு

தான் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடுமையாக உயர்ந்த கரோனா மூன்றாவது அலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்தத் தொற்றுக்கு சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன், தான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் 'நான் பாதுகாப்புடன் இருந்தும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். நான் குணமடைந்து வருகிறேன், விரைவில் உங்களை சந்திப்பேன்' என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவை பார்த்த ரசிகர்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் பெஸ்ட்செல்லர் என்ற வெப்சீரிஸ் வெளியாகி இருந்தது. இப்போது பிரபாஸுன் சலார் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து பாலகிருஷ்ணா ஜோடியாக தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறார்.

Related Stories

No stories found.